பேட்டரி இன்றி உங்கள் லேப்டாப்பை இயக்க ஒரு தந்திரம் இருக்கு...!

பேட்டரி இன்றி உங்கள் லேப்டாப்பை இயக்க ஒரு தந்திரம் இருக்கு...!

பொதுவாக மடிக்கணினிகள் ஒரு விண்டோஸ் அல்லது மேக்புக் எதுவாக இருப்பினும் பேட்டரி மற்றும் ஏ/சி (ஆல்டர்நேட்டிவ் கரண்ட்) அடாப்ட்டர் ஆகிய இரண்டுமே அதன் ஆற்றல் மூலாதாரமாக இருக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுருக

சற்று கற்பனை செய்து பாருங்கள். உங்கள் லேப்டாப்பில் பேட்டரியின்றி அதில் வேலை செய்ய முடியும், திரைப்படம் பார்க்க முடியும், கேம்கள் விளையாட முடியும், இசை கேட்க முடியும் என்றால் எப்படி இருக்கும்.? அதெல்லாம் மிக சாத்தியமற்றது என்பது எல்லோருக்குமே தெரிந்த ஒன்றே அது ஒருபக்கம் இருக்கட்டும் முடியாத காரியமென்று ஏதேனும் உண்டா என்ன..? - கிடையாது.! அப்படியாக, நீங்கள் ஒரு எளிய தந்திரம் மூலம் பேட்டரி இன்றி உங்கள் லேப்டாப் இயக்க முடியும். நிஜமாகத்தான். பொதுவாக மடிக்கணினிகள் ஒரு விண்டோஸ் அல்லது மேக்புக் எதுவாக இருப்பினும் பேட்டரி மற்றும் ஏ/சி (ஆல்டர்நேட்டிவ் கரண்ட்) அடாப்ட்டர் ஆகிய இரண்டுமே அதன் ஆற்றல் மூலாதாரமாக இருக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுருக்கும். முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

நீக்கப்பட்ட பின்பும் ஆக ஒரு மடிக்கணினியானது அதன் பேட்டரி நீக்கப்பட்ட பின்பும் அல்லது பேட்டரி தீர்ந்த பின்னும் கூட அதனால் திறம்பட வேலை செய்ய முடியும். எனவே, நீங்கள் உங்கள் லேப்டாப்பை ஏ/சி பவர் உடன் இணைத்துக்கொள்ள முடியும்.

உறுதி இதை நடைமுறைப்படுத்தி பார்ப்பதற்கு முன்பு நீங்கள் லேப்டாப் உடன் கிடைக்கப்பெற்ற அசல் பவர் அடாப்டரை தான் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

வேறுபாடுகள் ஏனெனில் மடிக்கணினியோடு கிடைக்கப் பெறாத அடாப்டர்களின் திறன்களில் வேறுபாடுகள் இருக்கும் அது உங்கள் மதர்போர்டை மிகத்தீவிரமாக சேதப்படுத்தி விடும்.

முன்னெச்சரிக்கை பேட்டரி இல்லாமல் ஒரு மடிக்கணினி இயக்குவது மிகவும் கண்கவர் தந்திரங்களில் ஒன்றாக இருக்கலாம் ஆனால், அதை நிகழ்த்தும் முன்பு சில விடயங்களை நீங்கள் மனதிற்கொள்ள வேண்டும்.

எப்போதும் ஒரு யுபிஎஸ் பயன்படுத்த வேண்டும் நீங்கள் அதிதீவிர மின்சார சுமைகள் கொண்ட பகுதிகளில் இருப்பின் எப்போதும் ஒரு யுபிஎஸ் பயன்படுத்துவது நல்லது. சக்தி செயலிழப்பு ஏற்பட்டால் கூட உங்கள் வேலை பாதிக்கப்படமாட்டாது.

ஒருபோதும் பவர் கோர்ட்தனை நீக்க கூடாது உங்கள் மடிக்கணினியின் கோர்ட்'தனை எப்போதும் நீக்க கூடாது, மீறினால் அது லேப்டாப் கூறுகளை பாதிக்கும் உடன் உங்கள் லேப்டாப்பை கட்டாயமாக ஷட் டவுன் செய்யும்.

பேட்டரி தொடர்புகளை தொட கூடாது லேப்டாப் ப்ளக்-இன் செய்யப்பட்டிருக்கும் போது பேட்டரி தொடர்புகள் எதையும் தொட கூடாது. மீறினால் பயனாளிகளுக்கு ஆபத்துகள் நேரிடலாம். ஏ/சி அடாப்டரை பயன்படுத்துவதை விட ஒரு பேட்டரியை பயன்படுத்துவதே எப்போதுமே நல்லது.

நாள் ஒன்றிற்கு சுமார் 150 முறை ஸ்மார்ட்போன் திரையை பார்ப்பதால் என்னவாகும்.?

நாள் ஒன்றிற்கு சுமார் 150 முறை ஸ்மார்ட்போன் திரையை பார்ப்பதால் என்னவாகும்.?

உங்களுக்கு நல்லா கண்ணு தெரியுமா.?? ஒரு நாளைக்கு சுமார் 150 முறை ஸ்மார்ட்போன் திரையை பார்ப்பவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், நிச்சயமாக உங்கள் கண்கள் 'விலை கொடுத்தே' ஆக வேண்டும். ஸ்மார்ட்போனில் ஆரம்பித்து, லாப்-டாப், டேப்ளெட், இ-ரீடர் என அதுவாக இருப்பினும் சரி, எல்லை மீறினால் - கண்ணில் சோர்வு, அரிப்பு , உலர்ந்த தன்மை, மங்கலான பார்வை மற்றும் தலைவலி என - பிரச்சனைகள் உறுதி..! சில எளிய மற்றும் ஆரோக்கியமான டிஜிட்டல் கருவி பயன்பாட்டு பழக்கங்களை கடைப்பிடித்தால் உங்கள் கண்களையும் அதன் பார்வை திறனையும் மிக காலம் சக்தி வாய்ந்ததாக நீட்டிக்கலாம், அதற்கான 7 டிப்ஸ் களை தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..! முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

டிப்ஸ் #01 : அடிக்கடி இமைத்துக் கொண்டே இருங்கள். அடிக்கடி உங்கள் கண்களை இமைப்பதால் ஒளிரும் உங்கள் கண்கள் ஈரப்பதமாகவே இருக்கும், அதனால், கண்களில் வறட்சி மற்றும் எரிச்சல் குறைக்கிறது.

டிப்ஸ் #02 : கண் கூசும் ஒளிவீச்சை தவிர்த்திடுங்கள். ஸ்மார்ட்போனில் இருந்து கிளம்பும் எரிச்சலூட்டும் பிரதிபலிப்பு ஒளியானது கண்ணை கூசும், அதன் அளவை குறைக்க உங்கள் ஸ்மார்ட் போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் அல்லது ஸ்க்ரீன் ப்ரோடக்டர் ப்ரிம் போன்றவைகளை பயன்படுத்தலாம்..!

டிப்ஸ் #03 : இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள். அதாவது ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், 20 அடி தொலைவில் இருக்கும் பொருளை 20 நொடிகள் ஊற்று பாருங்கள் உங்கள் கண்களுக்கு அது தான் இடைவெளி, இதைதான் 20-20-20 ரூல் என்பார்கள்.

டிப்ஸ் #04 : ப்ரைட்னஸ் சார்ந்த விடயத்தில் கவனம் செலுத்துங்கள். உங்கள் ஸ்மார்ட்போன் திரையனாது மிக பிரகாசமாக இருந்தாலும் சரி, மிக இருட்டாக இருந்தாலும் சரி, அது உங்கள் கண்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஆக, உங்கள் கண் பார்வைக்கு ஏற்றது போல 'ப்ரைட்னஸ் செட்' செய்து கொள்ளவது நல்லது..!
டிப்ஸ் #05 : டெக்ஸ்ட் சைஸ் மற்றும் காண்ட்ராஸ்ட்டில் மாற்றம் செய்யுங்கள். பெரிய டெக்ஸ்ட் சைஸ் மற்றும் அதிகமான கான்ட்ராஸ்ட் உங்கள் கண்கள் சிரமப்படுவதை அதிக அளவில் குறைக்கும்..!

டிப்ஸ் #06 : ஸ்க்ரீன் எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். கவனச்சிதறலை ஏற்படுத்தும் தூசு, அழுக்கு, அழுக்குத் தடம் அல்லது கைரேகை என எதுவாக இருந்தாலும் சரி, அவைகளை அடிக்கடி துடைத்துவிட்டு உங்கள் ஸ்க்ரீனை சுத்தமாக வைத்திருப்பது உங்கள் கண் பார்வைக்கு நல்லது.

டிப்ஸ் #07 : உங்களுக்கும் உங்கள் ஸ்மார்ட்போனுக்கும் இடையே தூரம் வேண்டும். பெரும்பாலான மக்கள் தங்கள் முகத்தில் இருந்து மட்டும் சுமார் 8 அங்குல தூரத்தில் தான் தங்களது ஸ்மார்ட்போன்களை வைத்து பயன்படுத்துகிறார்களாம். இது மிகவும் மோசமான செயல்பாடாகும், குறைந்தது 16 - 18 அங்குலமாவது தேவை..!

தாமதமாக கண்டறியப்பட்ட அண்டார்டிகா 'விசித்திரம்' - விஞ்ஞானிகள் கவலை.!

தாமதமாக கண்டறியப்பட்ட அண்டார்டிகா 'விசித்திரம்' - விஞ்ஞானிகள் கவலை.! 

கிழக்கு அண்டார்டிகாவின் பனிப்படலங்களில் ஆயிரக்கணக்கான அசலான நீல ஏரிகள் தோன்றியுள்ளன என்று விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர், உண்மையில் இதுவொரு கவலை அளிக்கும் கெட்ட செய்தியாகும், பிரச்சினை என்னவென்றால் இந்த வகையான நீல ஏரிகளை இதற்கு முன்பு விஞ்ஞானிகள் கண்டறிந்ததே இல்லை..! கிரீன்லாந்தின் ஐஸ் தாள் ஆனது 2011 மற்றும் 2014 இடையே 1 டிரில்லியன் டன் என்ற ஒரு அபாரமான அளவில் விரைவாக சரிந்து வருகிறது, அதற்கு காரணமாக இந்த ஏரிகள் ஆராய்ச்சியாளர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது. முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

8000 ஏரிகள் : செயற்கைக்கோள் படங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான வளிமண்டலவியல் தரவுகளை ஆய்வு செய்ததில் இருந்து 2000 முதல் 2013 வரை கிழக்கு அண்டார்டிகாவில், கிட்டத்தட்ட இதுபோன்ற 8000 ஏரிகள் உருவாகி உள்ளது என்பது முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மற்றும் கடலின் வெப்பநிலை : இதில் என்ன விசித்திரம் என்றால் உண்மையில் ஆராய்ச்சியாளர்கள் உயரும் காலநிலை மற்றும் கடலின் வெப்பநிலையால் கிழக்கு அண்டார்டிகா மிகவும் பாதிக்கப்படாத ஒன்று என்பதால் தங்கள் கவனத்தை எல்லாம் அண்டார்டிகா தீபகற்பத்தின் மேல் குவித்து வைத்திருந்தனர்.

கேள்விக்கு பதில் : அப்படியிருக்க ஏன் இந்த ஏரிகள் ஆயிரக்கணக்கான அளவில் திடீரென்று மூன்று ஆண்டுகளில் படிப்படியாக கிழக்கு அண்டார்டிகாவில் தோன்றியது என்ற கேள்விக்கு பதில் - காலநிலை மாற்றம்.

தொடர்பு : இந்த ஏரிகள் நேரடியாக அப்பகுதியின் காற்றின் வெப்பநிலையுடன் தொடர்பு கொள்கிறது

கவலை : ஆகையால் ஏரிகள் அதிகபட்ச மொத்த பரப்பளவு, அத்துடன் ஏரிகளின் ஆழம் ஆகிய விடயங்கள் அந்த பகுதியின் காற்று வெப்பநிலையை உச்ச நிலைக்கு கொண்டு செல்லும் தன்மை கொண்டவைகள் என்பது தான் இப்போதைய விஞ்ஞானிகளின் கவலையாகும்.

சிறுகைத்தொழில்-சாஸ் தயாரிப்பு தொழில்

சாஸ் தயாரிப்பு தொழில் 

‘வ ல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்பார்கள். அதேபோல கிடைக்கிற பொருள் எதுவாக இருந்தாலும் அதை வைத்து தொழில் நடத்தி லாபம் பார்க்க முடியும் என்பதற்கு சாஸ் தயாரிப்பு எளிய உதாரணம்!
சென்னையில் சாஸ் தயாரிப்பில் முழுவேகத்தில் செயல்பட்டு வரும் ளிபிவிஷி நிறுவனத்தின் சுப்பாராவையும் தியாகராஜனையும் சந்தித்துப் பேசிய போது, சாஸ் தயாரிப்பு வீட்டில் இருந்தே சிறு தொழில் செய்ய ஆசைப்படும் பெண்களுக்கு ஏற்ற வாய்ப்பு என்பது புரிந்தது.
‘‘இருபது ஆண்டுகளுக்கு முன்பு தற்செயலாக ஒரு ஓட்டலில் சுவைத்த சாஸ், எங்கள் ஆர்வத்தைத் தூண்ட, இப்போது தமிழ்நாடு முழுக்க சாஸ் சப்ளை செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறோம்’’ என்றார்கள் இருவரும்!
இப்போது பாஸ்ட்ஃபுட் கடை களும், ஓட்டல்களும் பெருகிக் கொண்டே இருப்பதால் மார்க்கெட்டில் சாஸ்களுக்கு டிமாண்ட் குறையவே போவதில்லை. அதனால், நம்பிக்கை யோடு சாஸ் தயாரிப்பில் இறங்கலாம்.
‘ஒரு கிலோவுக்கு அரைலிட்டர் சாஸ்… இதுதான் அளவு! எந்தளவுக்கு சாஸ் தயாரிக்கவேண்டுமோ அதைப்போல இரண்டு மடங்கு தக்காளியை வேகவைத்து, அரைத்து வடிகட்டி, அதோடு சர்க்கரை அல்லது மிளகாய் தூள், உப்பு, வினீகர் போன்றவற்றை சுவைக்கு ஏற்ப சேர்த்து கூடவே, நன்கு அரைத்த வெங்காயம் மற்றும் லவங்கம், பட்டை, கிராம்பு பவுடர் சேர்த்து மீண்டும் வேகவைத்து இறக்கினால் சாஸ் ரெடி! தக்காளியைக் கொண்டே புளிப்பு, காரம், இனிப்பு என பல சுவைகளில் சாஸ் தயாரிக்கலாம்’’ என்றார் சுப்பாராவ்.
தியாகராஜன், ‘‘இதை சிறிய அளவில் செய்யும்போது வீட்டில் வைத்தே தயாரிக்கலாம். தக்காளிப் பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி வேக வைத்து அரைத்துக் கொடுப் பதற்கு மெஷின் உள்ளது. வடிகட்டிய தக்காளி ஜூஸைப் பதமாக வேக வைக்க நீராவிக் கலன் உள்ளது. தக்காளி சாஸை பாட்டில் அல்லது பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து விற்கலாம்.
மூலப்பொருளான தக்காளி உள்ளூரிலேயே கிடைக்கிறது. அதிகளவில் தயாரிக்கும்போது விவசாயிகளிடம் ஒப்பந்த முறையில் நேரடியாக வாங்கிக்கொள்ளலாம். சிறிய அளவில் தயாரித்து விற்பனை செய்வதாக இருந்தால் இயந்திரங்கள் எதுவும் வாங்கத் தேவையில்லை. வீட்டிலேயே மிக்ஸியில் அரைத்து அடுப்பில் கொதிக்க வைத்து தயாரித்துவிடலாம். நமக்கு என்று தனி மார்க்கெட்டை பிடித்துக் கொண்ட பின்னர், இயந்திரங்களை வாங்கிக்கொள்ளலாம்’’ என்றார்.
சுப்பாராவ் தொடர்ந்தார். ‘‘உணவுப் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்வதற்கு ‘மினிஸ்டரி ஆஃப் ஃபுட் ப்ராஸசிங்’ என்ற மத்திய அரசு அலுவலகத்தில் சான்றிதழ் வாங்க வேண்டும். இவர்கள் லைசென்ஸ் கொடுத்தால் மட்டுமே பெரிய அளவில் தயாரித்து விற்பனை செய்யமுடியும். தயாரிப்பு சாம்பிளை ஆய்வுசெய்த பின்னர், நம்முடைய தயாரிப்பு இடத்தை ஆய்வு செய்ய வருவார்கள். மேலும் சாஸ் தயாரிக்கப் பயன்படுத்தும் தண்ணீரையும் ஃபுட் ப்ராஸசிங் அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள். எனவே தரக்கட்டுப்பாடு என்பது இதில் மிக முக்கியம்!
தற்போது பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்பு அதிக அளவில் இருந்து வரும் நிலையில் உள்நாட்டு தயாரிப்புகளுக்கும் ஏக வரவேற்பு இருக்கிறது. சாஸ் தயாரிப்பில் இறங்கும்முன், நம் இடத்தைச் சுற்றி எவ்வளவு ஃபாஸ்புட் கடைகள் இருக்கின்றன, எவ்வளவு ரெஸ்டாரென்ட்களில் சாஸ் பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்து ஓர் ஆய்வு செய்யவேண்டும். அவர்களிடம் சாம்பிள் கொடுத்து ஆர்டர் பிடிக்கலாம். தக்காளியைத் தவிர, பிற காய்கறிகள் விலை குறைவாகக் கிடைக்கும்போது அதை வாங்கியும் சாஸ் தயாரித்து விற்கலாம். குறிப்பாக மிளகாய், சோயா போன்ற பொருட்கள் மூலம் சாஸ் தயாரிக்கலாம்.
வீட்டில் இருந்தே ஒரு நாளைக்கு 50 பாட்டில்களைத் தயாரிக்க முடியும். ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் லாபம் வைத்து விற்றாலும் 300 முதல் 500 ரூபாய் கிடைக்கும். வீட்டுத் தயாரிப்புக்கு வரி பிரச்னை இல்லை. தக்காளி சீசன் சமயத்தில் நிறைய தயாரித்து கொடுத்து பணத்தை அள்ளலாம். மேலும், நம்மூரில் கிடைக்கும் பல்வேறு பழங்களைக்கொண்டு ஜாம், பழச்சாறு முதலியவற்றையும் தயாரித்தும் காசு பார்க்கலாம். வீட்டில் உள்ள குடும்பப் பெண்கள் மிக்ஸியை கூட பயன்படுத்தி சாஸை தயாரிக்கலாம். நன்கு அனுபவம் பெற்றபின் பெரிய அளவில் களமிறங்கிக் காசு பார்க்கலாம்’’ என்றார்.
சாஸ் தயாரியுங்க… ஜமாயுங்க!
http://tholilvaaipugal.blogspot.co.uk/

 

சிறுகைத்தொழில்-புதிய தென்னை கன்றுகளை உருவாக்குதல்

புதிய தென்னை கன்றுகளை உருவாக்குதல்

நல்ல மகசூல் தரக்கூடிய தென்னை மரங்களை தாய் தென்னைமரம் என்கிறோம். இந்த தாய் தென்னை மரங்களை தோட்டத்தில் வளர்ப்பதன் மூலம் தொடர்ந்து விதை எடுத்து புதிய தென்னை கன்றுகளை உருவாக்க முடியும். நல்ல தரமான தாய் மரங்களில் இருந்து விதை எடுக்க விரும்பும் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி பார்க்கலாம்.

தென்னையில் ரகங்கள்


தென்னையில் நெட்டை, குட்டை என்ற இரண்டு ரகங்கள் இருந்த போதிலும், இந்த இரண்டு ரகங்களிலும் மாறுபட்ட அளவில் காய்க்கும் குணமுடைய வகை தென்னைகள் உள்ளன. உதாரணமாக ஜாவாத் தீவில் ஜாவா நெட்டை மற்றும் ஜாவா ஜயண்ட் என்ற ரகங்கள் உள்ளன.
இதில் ஜாவா நெட்டை ரகம் என்பது நாம் சாதாரணமாக காணும் நெட்டை தென்னை போல் காய்கள் காணப்படும். ஆனால் ஜாவா ஜயண்ட் ரகம் என்பது சாதாரண நெட்டை தேங்காயை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு பெரிய காய்கள் கொண்ட ரகமாகும். பருப்பின் கனமும் அதிகமாக இருக்கும். இந்த பருப்பில் 71 சதவீதம் எண்ணெய் பதம் காணப்படுகிறது.
ஜாவா ஜயண்ட் வகை மரங்களில் ஒரு பூம்பாளையில் 8 முதல் 10 காய்கள் மட்டுமே காணப்படும். இது போன்று அந்தமான் சாதா நெட்டை, அந்த மான் ஜயண்ட் என இரண்டு ரகங்களும் உள்ளன. பிலிப்பைன்ஸ் நாட்டு ரக தேங்காயில் காய் பெரியதாகவும், பருப்பு அதிக கனத்துடனும் காணப்படும். இந்தியாவை பொறுத்த மட்டில் இங்கு மேற்கு கடற்கரை நெட்டை, கிழக்கு கடற்கரை நெட்டை என இரண்டு ரகங்கள் உள்ளன.
இதில் மேற்கு கடற்கரை நெட்டை நன்கு தடித்து பருமனாகவும், கொண்டை பெரிதாகவும் இருக்கும். ஒரே காலத்தில் 12 முதல் 13 பூம்பாளைகள் காணப்படும். ஒரு ஆண்டில் 80 முதல் 100 காய்கள் காய்க்கும். இது கேரளா பகுதியில் அதிகம் காணப்படுகிறது. ஆந்திரா, ஓரிசா மற்றும் தமிழகத்தின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளில் உள்ள மரங்களை கிழக்கு கடற்கரை நெட்டை என்று அழைக்கிறோம்.
இதன் பருமன், கொண்டை மற்றும் ஓலைகளின் நீளம் சற்று சிறுத்து காணப்படுவதுடன் காயின் பருமனும் சற்று குறைந்து காணப்படும். இந்த வகை மரங்கள் ஆண்டுக்கு 100முதல் 120 காய்கள் வரை காய்க்கும். இது தவிர தமிழகத்தில் அதிக பருப்பு, பெரிய காய்கள் 13 முதல் 16 பூங்குலைகள் உடைய ஈத்தாமொழி நெட்டை, ஐயம்பாளையம் நெட்டை மற்றும் நடுத்தர காய்களை கொண்ட திப்பத்துர் வகை மரங்களும் உள்ளன.
இது போன்று இளநீர் ரகம் எனப்படும் குட்டை ரகங்களும் உள்ளன. இதில் பச்சை, மஞ்சள், சிவப்பு நிறமுடைய காய்கள் தரும் தனி மரங்கள் காணப்படும். இந்த குட்டை ரகத்தில் பெரிய காய்களை உடைய மலேசிய வகையும், சிறிய காய்களை உடைய சாவக்காடு குட்டை வகையும் உள்ளன.

தாய் மரங்கள் தேர்வில் கவனிக்க வேண்டியவை

தாய் மரங்களை தேர்வு செய்யும் போது அவை நோய் தாக்குதல் இல்லாததாகவும், சரியான வயதுடையவையாகவும் இருத்தல் வேண்டும். இலையழுகல், இலைப்புள்ளி, இலைக்கருகல் மற்றும் கேரளா அல்லது தஞ்சை வாடல் நோய் இல்லாத மரங்கள் விதை எடுக்க ஏற்றவை. பொதுவாக, தஞ்சை வாடல் நோய் தாக்கப்பட்ட மரங்களின் திசுக்களில் கானோடெர்மாலுசிடம் என்ற பூசாண இழைகள் காணப்படும்.இந்த நோய்களில் உள்ள கிருமிகள் மற்றும் பூசாணங்கள் காய்களின் மூலம் கன்றுகளுக்கு பரவும் தன்மை உடையவை.
இதனால் இந்த நோய் காணப்படும் மரங்களை தாய் மரங்களாக தேர்வு செய்யக்கூடாது. இலைப்புள்ளி, இலைக்கருகல் மற்றும் குருத்தழுகல் போன்ற பூசாண நோய்களால் மரங்கள் தாக்கப்படுகின்றன. ஆனால் தோப்பில் ஒரு சில மரங்கள் இந்த நோயினால் தாக்கப்படுவதில்லை. ஆனால் அதே தோப்பில் வேறு பல மரங்கள் இந்த நோயினால் தாக்கப்படுவதில்லை. இந்த வகை எதிர்ப்பு திறனுள்ள மரங்களை தேர்வு செய்ய வேண்டும்.

வயது

விதைக்காக மரங்களை தேர்வு செய்யும் போது அவற்றின் வயதும் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாகும். அதாவது, நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் நன்றாக காய்க்க தொடங்கிய பல நூறு மரங்களிலிருந்து விதைகளை தேர்வு செய்வது நல்லது. ஆனாலும் சாதாரணமாக காய்க்கின்ற ஒரு சில மரங்களின் ஒரே பூங்குலையில் 70 காய்களும், மீதமுள்ள மற்ற குலைகளில் 5 அல்லது 10 காய்களும் மட்டுமே காய்ப்பதை காண முடியும்.
இது போன்ற மரங்களிலிருந்து விதை தேங்காய் தேர்வு செய்து கன்றுகளை நட்டால் சீரான காய்ப்பு திறன் இருக்காது. சீரான காய்ப்பு திறனை கண்டறிய சில வழி முறைகள் உள்ளன. உதாரணமாக, விஞ்ஞானிகள் 3 ஆண்டு சராசரி விளைச்சலின் அடிப்படையில் மேற்கு கடற்கரை நெட்டை வகையின் திறன் சராசரி 80 முதல் 100 காய்கள் எனவும், கிழக்கு கடற்கரை நெட்டை வகை 100 முதல் 120 காய்கள் எனவும் கண்டறிந்துள்ளனர். இதற்கடுத்து பல்வேறு தாய்மரங்களை ஒப்பிட்டு பார்த்து அவற்றின் முளைப்பு திறன் மற்றும் வீரிய கன்றுகள் உருவாகும் திறன் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தாய்மரங்களை தேர்வு செய்ய வேண்டும்.
இது தவிர காய் முளைக்கும் போது உருவாகும் கன்றுகளின் வளர்ச்சி, வீரியம் ஒரே சீராக இருத்தல் அவசியம். ஒரு சில தாய் மரங்களில் இருந்து எடுக்கப்படும் விதை தேங்காயிலிருந்து உருவாகும் கன்றுகள் ஒன்றுக்கொன்று வித்தியாசமான வளர்ச்சி வீரியத்துடன் காணப்படுவது இயல்பு. ஆகவே நல்ல முளைப்பு திறன் மற்றும் ஒரே சீரான வளர்ச்சி வீரியம் ஒருங்கிணைந்த குணங்கள் உடைய கன்றுகளை தரும் மரங்களை மட்டும் தேர்வு செய்ய வேண்டும்.

தென்னங்கன்றுகளை எந்த அளவு குழிகளில் நடவேண்டும்?

தென்னங்கன்றுகளை 3 அடி ஆழம் மற்றும் 3 அடி  அகலம் உள்ள குழிகளில் நடவேண்டும். இதற்கு காரணங்கள் உண்டு. தென்னை மரத்தின் தூர் பகுதியானது அதன் ஆண்டு வளர்ச்சியின் போது ஒரு கனஅடி அளவை பெறுகிறது. இந்த தூரிலிருந்து 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் சல்லி வேர்கள் பக்கவாட்டாக சென்று மரத்தை அசையாமல் தாங்கி பிடிக்கின்றன. இது தவிர இந்த வேர்கள் தினமும் சத்துக்கலந்த 35 மில்லி நீரை உறிஞ்சி மேல் நோக்கி அனுப்புகின்றன.
எனவே, தென்னங்கன்றை நடும் போது 3 அடி ஆழத்தில் தோண்டப்பட்ட குழிகளில் ஒரு அடி ஆழத்தில் முன்பு தோண்டி எடுக்கப்பட்ட மேல் மண்ணை நடுப்பகுதியில், வேர்ப்பகுதியில் வேர்களுடன் காணப்படும் சுமார் ஒரு அடி காய்ப்பகுதி இருக்கும் படி கையால் ஒரு அடி குழி எடுத்து காயை அதனுள் பதித்து மண்ணை காலால் மிதித்து விட வேண்டும். பின்னர், வாரம் ஒரு முறை சொட்டு நீர் பாசன முறைப்படி நீர்பாய்ச்சி வர வேண்டும். தேவைப்பட்டால் தென்னை அல்லது பனை ஒலையை கிழக்கு, மேற்கு திசைகளில் வைத்து வெயில்படாதபடி சுமார் 3 மாதம் பாதுகாக்கலாம்.
நட்டபின் குழியினுள் 2 அடி ஆழம் காலியாக இருக்க வேண்டும். இந்த நிலையில் காயின் மேல் பகுதியில் மண் விழாதபடி இருந்தால் சிறிய பெரிய வண்டுகளினால் இளம் தண்டினுள் காணப்படும் குருத்தோலை தாக்கப்படாமலும், கன்றுகள் சாகடிக்கப்படாமலும் பாதுகாத்துக் கொள்ளலாம்.

ஆதாரம் : டாக்டர். ஹென்றிலூயிஸ், தென்னைவிஞ்ஞானி. நாகர்கோவில்.
http://ta.vikaspedia.in/agriculture

 

சிறுகைத்தொழில்-பிரியாணி மிக்ஸ்.. பலே லாபம்

பிரியாணி மிக்ஸ்.. பலே லாபம்

பரபரப்பான வாழ்க்கை முறையில் பல பெண்களுக்கு ஆற அமர சமைப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. அவர்களுக்கும் பேச்லர்களுக்கும் பெரிதும் கை கொடுப்பது ரெடிமேடு மசாலா பொடி கள். அந்தவகையில் ரெடிமேடு வெஜிடேரியன் பிரியாணி மிக்ஸ், நான் வெஜிடேரியன் பிரியாணி மிக்ஸ் போன்றவற்றை தரமாக தயாரித்து விற்றால் கைநிறைய காசு பார்க்கலாம். நன்கு சமைக்க தெரிந்த பெண்கள், இந்த தொழிலில் வெற்றிக்கொடி நாட்டலாம்’ என்று கூறுகிறார் கோவை பீளமேடு பாவை மசாலா நிறுவன உரிமையாளர் சாவித்திரி (49). அவர் கூறியதாவது:
கணவர் மற்றும் மகன் ஷார்ஜாவில் பணிபுரிகின்றனர். இங்கு பெற்றோருடன் வசிக்கிறேன். வெளிநாட்டில் இருக்கும் கணவர் மற்றும் மகனுக்கு பாரம்பரிய உணவுகள் பிடிக்கும். அவற்றை சமைக்க தேவையான பொருட்கள் அங்கு கிடைக்காது. தேடிப்பிடித்து வாங்கினாலும் விலை அதிகம். எளிய முறையில் அவர்கள் சமைக்க ரெடிமேடு சாம்பார், ரசப் பொடி, பாயசம் மிக்ஸ், வெஜிடேரியன், சிக்கன், மட்டன் பிரியாணி மிக்ஸ் தயாரித்து கொடுத்து வந்தேன். கணவர், மகனின் வருமானத்தை சார்ந்து இருக்காமல் சுயமாய் சம்பாதிக்க, தொழில் துவங்க எண்ணினேன். தெரிந்ததை தொழிலாக செய்தால் எளிதில் வெற்றியடையலாம் என்பதால் முதலில் ரெடிமேடு வெஜிடேரியன் பிரியாணி, சிக்கன், மட்டன் பிரியாணி மிக்ஸ் தயாரித்து விற்றேன்.
பேச்லர்கள், குடும்ப பெண்களிடம் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து பாயசம் மிக்ஸ், சாம்பார், மஞ்சள் பொடி, மல்லித்தூள், மிளகுத்தூள் தயாரித்து விற்றேன். ஒவ்வொரு முறையும் ருசி, தரம் பரிசோதித்த பின்னரே விற்க அனுப்புகிறேன். சுவை, ஆரோக்கியம், குறைந்த லாபம் ஆகியவற்றை லட்சியமாக கொண்டுள்ளதால் நிரந்தர விற்பனை உள்ளது. பெண்கள் தங்கள் சமையல் திறமையை தொழிலாக மாற்றினால் நமது பாரம்பரிய உணவுப் பழக்கம் பல தலைமுறைக் கும் தொடரும். தொழிலும் லாபகரமாக இருக்கும்.
முதலீடு: அரிசி மற்றும் தானிய மசாலா பொருட்களை கல், மண் இல்லாமல் சுத்தம் செய்ய கிளீனிங் மெஷின் ரூ.25 ஆயிரம், மசாலா பொருட்களை வறுக்க பிரையிங் மெஷின் ரூ.75 ஆயிரம். அவற்றை பொடியாக்க கிரைண்டிங் மெஷின் ரூ.20 ஆயிரம், அவற்றை பாக்கெட் போட பேக்கிங் மெஷின் ரூ.1 லட்சம் என ரூ.2.2 லட்சம் தேவை.
கட்டமைப்பு : மெஷின்கள் அமைக்க 30க்கு 20 அடி இடமும், பொருள்களை இருப்பு வைக்க ஒரு அறையும், அலுவலக தொடர்புக்கு ஒரு அறையும் போதும்.
மூலப்பொருட்கள் : சீரகசம்பா அரிசி, சேமியா, மல்லி, மிளகாய், மிளகு, மஞ்சள் மற்றும் வாசனைப்பொருள்கள். பலசரக்கு பொருள் கள் விருதுநகரிலும், வாசனைப்பொருட்கள் மதுரையிலும், மிளகு நீலகிரி, கூடலூரிலும் குறைந்த விலையில் கிடைக்கும். அவ்வப்போது நிலவும் விலை நிலவரத்துக்கேற்ப மற்ற இடங்களிலும் இந்த பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும்.
உற்பத்தி செலவு: மாதம் தலா அரை கிலோ கொண்ட 2 ஆயிரம் வெஜிடேரியன் மிக்ஸ், 2 ஆயிரம் சிக்கன், மட்டன் பிரியாணி பாக்கெட், ஆயிரம் பாயசம் மிக்ஸ் பாக்கெட்கள் மற்றும் தலா 500 கிலோ மஞ்சள் தூள், மட்டன் மசாலா, சிக்கன் மசாலா, 300 கிலோ மிளகாய் தூள் பாக்கெட்கள் தயாரிக்கலாம். இதற்கு மூலப்பொருட்கள் செலவு,6 வேலையாட்கள் சம்பளம், மின்கட்டணம், வாடகை, போக்குவரத்து உள்பட உற்பத்தி செலவுக்கு ரூ.5.7 லட்சம் தேவை.
மாதம் ரூ.85 ஆயிரம் லாபம்
மாதம் உற்பத்தியாகும் ரூ.5.7 லட்சம் மதிப்பிலான பொருளுக்கு, உற்பத்தியாளருக்கான லாபம் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை கிடைக்கும். இதன் மூலம் ரூ.57 ஆயிரம் முதல் ரூ.85 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். விற்பனை செய்யப்படும் பாக்கெட்கள் ஸ்டாக்கிஸ்ட்கள் மூலம், டிஸ்ட்ரிபியூட்டர்கள் வழியாக சில்லரை கடைகளுக்கு சென்றடைகிறது. 3 பேருக்கும் தலா 15 சதவீதம் லாபம் வரும் வகையில் கொடுக்கப்படுவதால் மார்க்கெட்டிங் எளிதாகிறது.
10 நிமிடத்தில் பிரியாணி தயாரிக்கலாம்
சமையல் சுத்தமாய் தெரியாதவர்கள்கூட பேச்லர் பிரியாணி மிக்ஸ் மூலம் எளிதில் 10 நிமிடத்தில் பிரியாணி தயாரிக்க முடியும். அரை கிலோ பிரியாணி மிக்ஸ் உடன் அரை கிலோ சிக்கனோ, மட்டனோ சேர்த்து ஒரு டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றி, மூடி 2 விசில் வந்தவுடன் இறக்கிவிடவும். இவை 10 நிமிடத்தில் முடிந்துவிடும். பின்னர் நெய் ஊற்றி கிளறினால் சுவையான பிரியாணி ரெடி. சிக்கன், மட்டனுக்கு பதில் காய்கறிகள் (கேரட், பட்டாணி, பீன்ஸ்) பயன்படுத்தினால் வெஜிடேரியன் பிரியாணி தயாராகிவிடும். ரெடிமேடு பிரியாணி மிக்ஸ் சமைப்பதற்கு எளிதாக உள்ளதால் வரவேற்பு அதிகரித்துள்ளது.
தயாரிப்பது எப்படி?
வெஜிடபிள் பிரியாணி மிக்ஸ், சிக்கன், மட்டன் பிரியாணி மிக்ஸ், பாயசம், சாம்பார் தூள், மல்லித்தூள், மிளகுத்தூள் ஆகியவை தயாரிக்கலாம். ஒவ்வொரு பொருள் தயாரிப்பதற்கும் தேவையான மூலப்பொருட்களின் அளவுகள், ஒவ்வொருவரின் கைப்பக்குவத்துக்கும், தனி முத்திரைக்கும் ஏற்றவகையில் மாற்றிக்கொள்ளலாம்.
வெஜிடபிள் பிரியாணி மிக்ஸ்: மல்லித்தூள், மிளகு, சுக்கு, பூண்டு, கிராம்பு, ஏலக்காய், லவங்கப்பட்டை, புதினா ஆகியவற்றை வறுத்து, பொடியாக்கி வெஜிடபிள் ஆயில், சீரக சம்பா அரிசியுடன் கலந்து அரை கிலோ வீதம் பாக்கெட் போட வேண்டும். 6 மாதம் வரை கெடாது. சிக்கன், மட்டன் பிரியாணி மிக்சுக்கும் இதே பொருட்கள், இதே முறை.
பாயசம் மிக்ஸ் : ஜவ்வரிசி, பால்பவுடர், முந்திரிப்பருப்பு, குங்குமப்பூ, பாதாம், பிஸ்தா பருப்பு, ஏலக்காய்  ஆகியவற்றை வறுத்து பொடியாக்கி சேமியாவுடன் கலந்து 200 கிராம் வீதம் பாக்கெட் போடலாம். 6 மாதம் வரை கெடாது.
மட்டன் மசாலா : மல்லி, மிளகாய்பொடி, சுக்கு, மிளகு, கடுகு, லவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், மஞ்சள், சீரகம், பூண்டு ஆகியவற்றை வறுத்து பொடியாக்கி 50 கிராம், 100 கிராம் வீதம் பாக்கெட் போடலாம். சிக்கன் மசாலாவுக்கு இதே பொருட்களை கூட்டிக் குறைத்து சேர்த்து தயாரிக்க வேண்டும். 
சாம்பார் பொடி: மல்லி, மிளகாய், துவரம்பருப்பு, பாசிப்பயறு, கொண்டைக்கடலை, கடுகு, மிளகு, சீரகம், பெருங்காயம், மஞ்சளை வறுத்து பொடியாக்கி 50 கிராம், 100 கிராம் வீதம் பாக்கெட் போடலாம்.
http://hajamohinudeenhhma.blogspot.co.uk/

 

சிறுகைத்தொழில்-சுய தொழில்கள்-நண்டு வளர்ப்பு,கருவாடு உற்பத்தி:

சுய தொழில்கள்-நண்டு வளர்ப்பு,கருவாடு உற்பத்தி:

சேற்று நண்டு வளர்ப்பு
சேற்று நண்டு
ஏற்றுமதி சந்தையில் அதிகம் தேவையிருப்பதால், சேற்று நண்டு, பிரபலமாகி வருகிறது. வர்த்தக ரீதியாக நண்டு வளர்ப்பு இப்பொழுது ஆந்திரம், தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளில் வேகம் பரவி வருகிறது.
சேற்று நண்டின் வகைகள்
கடலோர பகுதிகள், கழிமுகம் மற்றம் உப்பங்கழி ஆகிய பகுதிகளில், சில்லா (Scylla) என்ற வகை சேற்று நண்டுகள் காணப்படும்.
i. பெரிய இனங்கள் :
பெரிய வகை நண்டுகள் வட்டார மொழியில் ‘பச்சை சேற்று நண்டு’ என்ற அழைக்கப்படும்
இவை அதிகபட்சமாக 22 செ.மீ அகலமும், 2 கிலோ எடை அளவும் வளரக் கூடியவை.
இவை சுதந்திரமாக வாழக்கூடியவை. இவைகளின் கால் போன்ற பகுதிகளில், பல கோண வடிவ வரிகள் காணலாம்.
ii. சிறிய வகைகள்:
சிறிய வகைகள், ‘ரெட் கிளா’ என்று அழைக்கப்படும்
இவை அதிகபட்சமாக 12.7 செ.மீ அகலமும், 1.2 கிலோ எடை அளவும் வளரக் கூடியவை
இவைகளில் பல கோண வடிவ வரிகள் காணப்படாது. இவை மண் தோண்டும் பழக்கமுடையவை.
இரு வகைகளுக்கும், உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சந்தையில் அதிக தேவையுள்ளது.
வளர்ந்த சேற்று நண்டு
வளர்ப்பு முறைகள்
சேற்று நண்டுகளை, இரு முறைகளில் வளர்க்கலாம்
i.குரோ – அவுட் முறை
இம் முறையில் இள நண்டுகள், தேவையான அளவு வளரும் வரை (5-ல் இருந்து 6 மாதம் வரை), வளர்க்கப்படும்.
இம்முறையில், நண்டுகள் வளர்ப்புக்கு, சாதாரணமாக குட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் சதுப்பு நிலக் காடுகள் காணப்படலாம் அல்லது காணப்படாமலும் இருக்கலாம்.
குட்டையின் அளவு 0.5-லிருந்து 2 ஹெக்டெர் வரை இருக்கலாம். போதுமான வரப்பு மற்றும் கடல் நீர் மாற்றுவதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும்.
குட்டை சிறியதாக இருப்பின், வேலிகள் இருக்க வேண்டும். இயற்கையான பெரிய குட்டைகளில், நீர் வெளியேறும் பகுதிகள் வலுவாக பாதுகாக்கப்பட வேண்டும்.
10லிருந்து 100 கிராம் வரை அளவுடைய, இள காட்டு வகை நண்டுகளை விதை நண்டுகளாக வைத்துக் கொள்ளலாம்.
வளர்ப்பு காலம் 3ல் இருந்து 6 மாதங்கள் ஆகும்
ஒரு சதுர மீட்டருக்கு 1-லிருந்து மூன்று நண்டுகள் வரை இட்டு, துணை உணவு அளிக்க வேண்டும்.
பொதுவாக கழிவாகக் கருதப்படும் மீன்களுடன், வட்டாரத்தில் கிடைக்கும் ஏனைய உணவு வகைகள் நண்டுகளுக்கு உணவாக கொடுக்கப்படலாம். (உடல் எடையின் அளவின் 5 % எடை, ஒரு தினத்திற்கு உணவாக கொடுக்கப்பட வேண்டும்)
அடிக்கடி வளரும் நண்டினை எடுத்து, பொதுவான வளர்ச்சி மற்றும் உடல்நலத்தை கண்காணிக்க வேண்டும்.
மூன்றாவது மாதத்திலிருந்து தகுந்த எடையையுடைய நண்டினை அறுவைடை செய்யலாம். இந்த எண்ணிக்கை குறைப்பு மூலம், மற்ற நண்டுகள் நன்றாக வளர வாய்ப்பு உள்ளது.
ii. ஃபேட்டனிங்க (தடிமனாக்கம் ) முறை
மென் ஓடு நண்டுகளை, சில வாரங்கள், வெளி ஓடு தடிப்பு ஆகும் வரை வளர்க்கப்படும். இந்த கடின ஓடுடைய நண்டுகள், வட்டார வாக்கில் சேறு (சதை) என்று வழங்கப்படும். இவை சாதாரன மென் நண்டுகளை விட மூன்றில் இருந்து நான்கு மடங்க விலை அதிகமாக விற்கப்படும்
a. குட்டைகளில் தடிமனாக்கும் முறை
1 – 1.5 மீ நீரின் ஆழம் கொண்ட, 0.025 – 0.2 ஹெக்டர் அளவுடைய கடலோர குட்டைகளில் தடிமனாக்கும் முறையை கையாளலாம்.
விதை மென் நண்டுகளை விடுவதற்கு முன்னர், குட்டையின் அடிப்புற நீரை வடிகட்டி, சூரியனால் உலர்த்தி, தேவையான அளவு சுண்ணாம்பை இட வேண்டும்.
குட்டையின் வரப்பை ஓட்டைகள், விரிசல்கள் இல்லாதவாறு, மொழுக வேண்டும். மதகு பகுதிகளில் தனி கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் இதன் வழியாக தான் நண்டுகள் தப்பிச் செல்லும்.
நுழைவாயில் பகுதியில், வரப்பை, மூங்கில் பாய்க் கொண்டு வலுவூட்ட வேண்டும்.
வரப்பினை மூங்கில் குச்சிகள் மற்றும் வலையினை கொண்டு சரியான முறையில் வேலியிட வேண்டும். நண்டு வெயியேறுவதை தவிர்க்க, இந்த வேலிகள், குட்டையில் உட்புறம் சாய்வலாக அமைய வேண்டும்.
மீனவர்கள் அல்லது நண்டு விற்பவர்களிடமிருந்து, விதை மென் நண்டினை வாங்கி, இதன் அளவை பொறுத்து, ஒரு சதுர மீட்டருக்கு 0.5-லிருந்து 2 வரை இட வேண்டும்.
சந்தையில், 550 கிராம் எடைக்கு மேல் உள்ள நண்டுகளுக்கு கிராக்கி அதிகம். எனவே இவ்வகை நண்டுகளை விதை நண்டாக விடுவது நல்லது. இவ்வாறு விடும் போது ஒரு சதுர மீட்டருக்கு ஒரு நண்டே இட வேண்டும்.
வட்டாரம் மற்றும் நீர் நண்டு கிடைப்பதை பொறுத்து, 6 – 8 தடிமனாக்கும் சுழற்சிகளை கையாளலாம்.
வளர்ப்பு குட்டை பெரியதாக இருப்பின், அதனை வெவ்வேறு பாத்திகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பிரித்து, வெவ்வேறு அளவுடைய நண்டினை வெவ்வேறு பாத்திகளில் விட்டு வளர்க்கலாம். இதனால் எளிதாக உணவு அளிப்பது, கண்கானிப்பது, அறுவடை செய்வது முடியும்
விதை நண்டு இடும் இடைவெளி அதிகமாக இருப்பின், ஒரே பாத்தியில் ஒரே மாதிரியான நண்டினை இடலாம்.
ஆண் நண்டு, பெண் நண்டினை தனித்தனி பாத்திகளில் வளர்ப்பதன் மூலம், வலிய ஆண் நண்டின் தாக்குதலை குறைக்க முடியும். பழைய டயர்கள், மூங்கில் கூடைகள் போன்ற தங்குமிடங்களை இடுவதன் மூலமும் தாக்குதல் மற்றும் நண்டே நண்டினை
நண்டு தடிமனாக்கும் குட்டை
நுழைவாயிலை மூங்கில் பாயால் வலுப்படுத்தப்பட்டுள்ளது
“inlets”
b. அடைப்பு பகுதி மற்றும் கூண்டினில் நண்டினை தடிமனாக்கும் முறை
கழிமுக நீர் நிலைகளிலோ அல்லது பெரிய இறால் குட்டைகளிலோ, அடைப்புப்பகுதி, மிதக்கும் வலைக்கூண்டு அல்லது மூங்கில் கூண்டு ஆகியவற்றைக் கொண்டும் நண்டினை வளர்க்கலாம்.
நெட்லான் அல்லது மூங்கில் கம்புகள் கொண்டு வலைகளை உருவாக்கலாம்.
கூண்டின் அளவு 3மீ x 2மீ x 1மீ ஆகும்
வலைகளை வரிசையாக அடுக்குவதன் மூலம் உணவு அளிப்பது மற்றும் பராமரிப்பது எளிதாகம்.
ஒரு சதுர மீட்டர் கூண்டிற்கு, 10 நண்டுகளும், ஒரு சதுர மீட்டர் அடைப்பகுதிக்கு 5 நண்டுகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கூண்டில் அதிகமான நணடுகள் இருப்பதால், நண்டின் கொடுக்கின் நுனியை கிள்ள வேண்டும். இதனால் தாக்குதல் குறைவு ஆகம்.
எனினும், குட்டைகளில் வளர்ப்பது போல் இம்முறை பிரபலம் ஆகபடவில்லை.
குரோ – அவுட் மற்றும் தடினமாக்கும் முறைகளை ஒப்பிடும் போது, தடிமனாக்கும் முறையிலேயே குறைந்த காலத்தில் அதிக இலாபம் கிடைக்கும். இந்தியாவில் நண்டு விதைகள் மற்றும் வர்த்தக ரீதியான உணவு கிடைக்காததால், குரோஅவுட் முறை பிரபலம் அடையவில்லை.
உணவு
Cநண்டுகளுக்கு தினமும் கழிவு மீன், வேகவைத்த கோழி இறைச்சி கழிவுகள் ஆகியவற்றால், நண்டின் எடையளவில், 5-8% என்ற விகிதத்தில் உணவு அளிக்கப்படும். ஒரு நாளில், இருவேளை உணவு அளிக்கப்பட்டால், பெரும் பகுதியை சாயங்கால நேரத்தில் அளிக்க வேண்டும்.
நீர் தரம்y
கீழே கொடுக்கப்பட்டுள்ள அளவு நீரீன் தரம் இருக்க வேண்டும்
உப்புத் தன்மை
15-25%
வெப்பம்
26-30 டிகிரி செல்சியஸ்
உயிர் வாயு
> 3 பி.பி.எம்
கார-அமில தன்மை
7.8-8.5
அறுவடை மற்றும் விற்பனை
ஒழுங்காக நண்டின் தடிப்பு தன்மையை கண்காணிக்க வேண்டும்.
அறுவடையை விடியற்காலையிலோ அல்லது சாயங்கால நேரங்களிலோ செய்ய வேண்டும்.
அறுவடை செய்யப்பட்ட நண்டுகளை நல்ல உவர்ப்பு நீரால் கழுவி அழுக்கு மற்றும் சேற்றை நீக்க வேண்டும். அவற்றின் கால்கள் ஒடியாதவாரு அவற்றை கட்ட வேண்டும்.
அறுவடை செய்யப்பட்ட நண்டுகளை ஈரப்பதம் உடைய சூழ்நிலையில் இட வேண்டும். அவற்றை சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். ஏனென்றால், சூரிய ஒளி நண்டுகளின் இறப்பை அதிகரிக்கும்
அறுவடை செய்யப்பட்ட நண்டு
கடினமான சேற்று நண்டு
அறுவடைக்கு பின்னர்
நண்டு வளர்ப்பின் பொருளாதாரம் – வருடத்திற்கு 6 வளர்ப்பு – (0.1 ஹெக்டர் கடற்கரையோர குட்டை)
ஆ. வருடத்தின் நிலையான செலவு
ரூபாய்
குட்டை (குத்தகை செலவு)
10,000
மதகு வழி
5,000
குட்டை தயாரித்தல், வேலி அமைத்தல் மற்றும் இதர செலவுகள்
10,000
ஆ. செயல்பாட்டு செலவு (ஒரு வளர்ப்புக்கு)
1. நீர் நண்டின் விலை (400 நண்டுகள், ரூ. 120/கிலோ ).
120/kg)
36,000
2. உணவு செலவு
10,000
3. ஆட்கூலி
3,000
ஒரு வளர்ச்சிக்கு (மொத்தம்)
49,000
6 வளர்ச்சிக்கு மொத்தம்
2,94,000
இ.வருடாந்திர மொத்த செலவு
3,19,000
ஈ. மகசூல் மற்றும் வறுமானம்
ஒரு சுழற்சியில் உற்பத்தியாகும் நண்டு
240 கிலோ
மொத்தம் 6 சுழற்சிக்கு (ரூ. 320/கிலோ)
4,60,800
உ. நிகர வருமானம்
1,41,800
ஒரு சராசரியான குட்டைக்கு (ஒரு சிறு/குறு விவசாயினால் பராமரிக்க படகூடிய), பொருளாதார கணக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. இதை விடவும் சிறிய குட்டைகளிலும் வளர்க்கலாம்
நண்டின் அடர்த்தி குறைவு (ஒரு சதுர மீட்ருக்கு 0.4 எண்ணிக்கை) ஏனென்றால் பரிந்துரைக்கப்பட்ட அளவு 750 கிராம் ஆகும்.
முதல் வாரத்தில், நண்டின் எடையில் 10% என்ற விகிதத்தில் உணவும், பின்னர் 5% என்ற விகிதத்தில் உணவு அளிக்க வேண்டும். உணவு வீண் அடையாமல் இருக்கவும் மற்றும் தண்ணீரின் தரம் குறையாமல் இருக்கவும், உணவு தட்டுகளை பயன் படுத்தலாம்.
நன்றாக பராமரிக்கப்படும் குட்டைகளில், 8 முறை வளர்ச்சியை மேற்கொள்ளலாம் (80% – 85% உயிருடன் இருக்கும் நிலையில்) . ஆனால் இந்த கணக்கீட்டில் 75% உயிருடன் இருக்கும் நிலையில், 6 வளர்ச்சியே எடுக்கப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட மீன் பதப்படுத்தும் (கருவாடு உற்பத்தி) முறை
கருவாடு உற்பத்தி என்பது நமது நாட்டின் பழமையான, சிக்கனமான மற்றும் பாரம்பரிய முறையாகும்
இம்முறையில் உள்ள குறைபாடுகள்
பொதுவாக, கருவாடு உற்பத்திக்கு, தரம் குறைந்த மீனை உபயோகிப்பது.
இதில் உபயோகிக்கும் உப்பு, மிக தரம் குறைந்ததாக, மண் மற்றும் அழுக்குடன் இருக்கும். இதனால் இந்த உப்பை உபயோகித்து பதப்படுத்தப்படும் மீன், தரம் குறைந்ததாக இருக்கும்.
மீன் பதப்படுத்தப்படும் பண்ணையில் நல்ல நீர் கிடைப்பது அரிது.
கடலிலிருந்து கொண்டுவரப்படும் மீன்கள், பெரிய சிமெண்ட் தொட்டியில் அடுக்கடுக்காக, உப்பினை நடுவில் இட்டு அடுக்கப்படும். இடமும் சுத்தமாக இருக்காது. இப்படி தொட்டிகளில் இரண்டு அல்லது மூன்று தினங்கள் வைத்த பின்னர், கடற்கரையில் திறந்த வெளியில், சூரியனில் உலர்த்தப்படும். இப்படி வைக்கும் பொது, நிறைய மணல் மீன் மேல் ஒட்டிக் கொள்ளும். பின்னர் குவித்து வைக்கப்படும்.
இப்படி பதப்படுத்தப்படும் மீன், சிகப்பு ஹலோபிலிக் பாக்டீரியாவால் மாசுபடுவதனால், இரண்டிலிருந்து மூன்று வாரம் மட்டுமே, பதப்படுத்திய மீனை சேமிக்கலாம்.
கேரள மாநிலம், கலிக்கட்டில் உள்ள, மத்திய மீன் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம், தரமான பதப்படுத்தப்பட்ட மீன் தயாரிப்புக்கு, சில முறைகளை வகுத்துள்ளது. அவற்றின் குறிப்புகள், கீழே கொடுக்கப்பட்டுள்ளது:-
முறை
புதிய மீன் கடலிலிருந்து கொண்டுவரப்பட்ட பின்பு, உடனடியாக சுத்தமான கடல் நீரில் கழுவி, மீன் மேல் ஒட்டிக் கொண்டிருக்கும், அழுக்கு மற்றும் ஏனையவற்றை நீக்க வேண்டும்.
இவைகளை பின்னர் பதனிடும் இடத்திற்குச் எடுத்துசென்று, மிக கவனமாக சுகாதாரம் மற்றும் தரத்தை பேன வேண்டும். வழக்கமான முறையை போல் அல்லாமல், ஏனைய பதனீட்டு செயல்பாடுகளை, மேஜைகள் மேல், மேற் கொள்ள வேண்டும். இதனால் அழுக்கு, மணல் போன்றவைகளால் மாசுபடுவது கட்டுப்படுத்தப்படும்.
10% குளோரின் அளவு கொண்ட நீரை சுத்தப்படுத்த பயன்படுத்துதல் நல்லது.
பதனிடப்படும் மேஜைகளில், மீன்கள் உள்உடலுறுப்புகளை நீக்கப்பட்டு சுத்தம் செய்யப்படும். Êசார்டீன் போன்ற மீன்களில், பதப்படுத்தப்பட்ட பொருளின் தோற்றத்தை மேம்படுத்த, செதில்களை நீக்கலாம். நீக்கப்பட்ட உடலுறுப்புகள், மேஜையின் கீழ் வைக்கப்பட்ட கழிவு கூடையில் உடனே போடப்பட வேண்டும். உள்உடலுறுப்புகளை நீ்க்குவது சாத்தியமற்ற சிறிய மீன்களை, நன்றாக சுத்தம் செய்த பின்னர் நேரடியாக உப்பில் இட வேண்டும்.
இவ்வாறு சுத்தம் செய்யப்பட்ட மீன்களை, நல்ல நீரில் கழுவி, நீரை வடிகட்ட வேண்டும். இதை ஜல்லடை போன்ற அமைப்பையுடைய பிளாஸ்டிக் பாத்திரத்தில் எளிதாக செய்யலாம்.
நன்றாக வடிகட்டிய பின்னர், மீனை உப்பிடும் மேஜைக்கு எடுத்துச் சென்று, தரமான உப்பை ஒழுங்காக கையினால் இட வேண்டும். இதை இடும் வேலையாட்களின் கை, சுத்தமாக இருக்க வேண்டும். பொதுவாக மீன் மற்றும் உப்பின் விகிதம் 1:4 என்ற முறையில் இருக்க வேண்டும்.
உப்பு நேர்த்தி முடிந்தவுடன், மீனை சத்தமான சிமெண்ட் தொட்டியில் குறைந்தது 24 மணி நேரம் அடுக்கி வைக்க வேண்டும். பின்னர் மீனை வெளியில் எடுத்து, மேலே ஒட்டியுள்ள உப்பு கட்டிகள் நீங்கும் பொருட்டு, நீரினால் கழுவ வேண்டும்.
இவ்வாறு உப்பிடபட்ட மீன்கள், சுத்தமான உலர்த்தும் மேடைகளில் உலர்த்தப்பட வேண்டும். மேடைகளானது, உயர்த்தப்பட்ட சிமெண்ட் மேடை அல்லது மூங்கில் தட்டிகளாகவோ இருக்கலாம். இவை இல்லையென்றால், மீனை மூங்கில் பாயிலும் உலர்த்தலாம்.
ஒவ்வொரு தருணத்திலும், சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும்.
பயன்படுத்தப்படும் பாதுகாப்பு வேதிப் பொருள்கள்
இந்த முறையில் பதப்படுத்தப்பட்ட மீன்களுக்கு, கால்சியம் புரோபியோனேட் மற்றும் தூள் உப்புக் கொண்ட கலவையை தூவ வேண்டும்.
இந்த கலவையை மூன்று பகுதிகள் கால்சியம் புரோபியோனேட் மற்றும் 27 பகுதிகள் தூள் உப்புக் கொண்டு, உடனுக்குடன் தயாரித்துக் கொள்ளலாம்.
மீனின் அனைத்து பரப்புகளிலும், ஒரே சீராக படும்படி கலவையை இட வேண்டும்.
பொதுவாக 1 கிலோ கலவையைக் கொண்டு 10 கிலோ மீனுக்கு தூவலாம்.
இதன் பின்னர், உதிரி விற்பனைக்கு குறிப்பிட்ட அளவினை எடையிட்டு, பாலீதீன் பைகளில் அடைக்கலாம். மொத்த விற்பனைக்கு, பாலீதீன் இழையிடப்பட்ட, சாக்குகளில் அடைக்கலாம். இவ்வாறு பாக்கேஜ் செய்யப்படுவதால், சேமித்து வைக்கப்பட்டிருக்கும் போது, பதப்படுத்த்ப்பட்ட மீன் அதிகமாக உலர்வது தடுக்கப்படும். மேலும், பாதிப்பு உருவாக்ககூடிய பாக்டீரியாவில் இருந்தும் பாதுகாக்கப்படும்.
Êசமைப்பதற்கு முன்னர், மீனை நீரில் ஈடும் போது, உப்புடன் சேர்ந்து, இந்த கவவையும் நீக்கப்படும்.
எனவே பதனிட்ட மீனை நீன்ட நாள் வைப்பதற்கு மிக எளிய, பாதுகாப்பான மற்றும் தரமான முறையாகும்.
இவ்வாறு பாதுகாக்கப்பட்ட மீனை குறைந்தது, எட்டு மாதம் வரை நல்ல நிலையில் வைத்து இருக்கலாம்.
இம் முறையின் சிறப்புகள்
இம்முறை மிக எளிய மற்றும் சராசரி மனிதனாலும் எளிதாக கையாளபடக்கூடிய முறை.
இது கொடிய பாக்டீரியாவில் இருந்து மீனை பாதுகாப்பதால், பதனிடப்பட்ட மீனின் சேமிப்பு காலத்தை அதிகப்படுத்தும்.
மீனின் நிறம், வாசனை மற்றம் சுவையை, கால்சியம் புரோபியோனேட் எந்த வகையிலும் பாதிக்காது.
மற்ற முறைகளுடன் ஒப்பிடும் போது மிக மலிவான முறையாகும். சேமிப்பு காலம் அதிகரிப்பு மற்றும் அதிக விலை கிடைத்தல் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டால், இம்முறைக்கு ஆகும் தயாரிப்புச் செலவு மிகுதி, மிக குறைவாகும்

 

Recent Posts

பேட்டரி இன்றி உங்கள் லேப்டாப்பை இயக்க ஒரு தந்திரம் இருக்கு...!

பேட்டரி இன்றி உங்கள் லேப்டாப்பை இயக்க ஒரு தந்திரம் இருக்கு...! பொதுவாக மடிக்கணினிகள் ஒரு விண்டோஸ் அல்லது மேக்புக் எதுவாக இருப்பினும்...